search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பசுமாடு பலி"

    வேடசந்தூர் அருகே மின்னல் தாக்கியதில் தி.மு.க பிரமுகர் உள்பட 2 பேர் மற்றும் பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

    வேடசந்தூர்:

    வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. குஜிலியம்பாறையை சேர்ந்த கணேசன்(வயது38). இவர் பாளையம் பேரூராட்சி ராமகிரி தி.மு.க வார்டு செயலாளராக இருந்தார். நேற்று மாலை தனது தோட்டத்தில் இருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இதேபோல் 100 நாள் வேலைக்கு சென்ற சாமிமுத்தன் பட்டியை சேர்ந்த மரியசெல்வம்(35). மழைக்காக மரத்தின் அடியில் நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து எரியோடு போலீசார் விசாரித்து வருகின்றனர். ரங்கநாத புரத்தை சேர்ந்த உமாசங்கர்(40). தோட்டத்தில் கறவை மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்றிரவு இரவு பெய்த மழையின்போது மின்னல் தாக்கி சுமார் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள பசுமாடு பலியானது. இதேபோல் ஆர்.ஜி.வலசை சேர்ந்த மாலதி என்பவரது பசுமாடும் மின்னல் தாக்கி பலியானது.

    டெல்லியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 20 பசுமாடுகள் பரிதாபமாக பலியானது. #ExpressTrain #Cow
    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டம் கல்கா நகரில் இருந்து டெல்லியின் வடமேற்கு பகுதியில் நரேலா நகருக்கு கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை சென்றுகொண்டிருந்தது. டெல்லியின் ஹோலிம்பி காலன் மற்றும் நரேலா ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரெயில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது அங்குள்ள தண்டவாளத்தை பசுமாடுகள் கூட்டமாக கடந்து செல்ல முயன்றன.

    இதைப்பார்த்ததும் ரெயிலின் ஓட்டுநர் ‘எமர்ஜென்சி பிரேக்’கை பயன்படுத்தினார். ஆனாலும் ரெயில் அதிகவேகத்தில் சென்றதால் நிற்காமல் மாடுகளின் மீது மோதிவிட்டு சென்றது.

    இதில் 20 மாடுகள் பரிதாபமாக செத்தன. ரெயில் தண்டவாளத்தில் சிறிய அளவில் சேதாரங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மாடுகளின் உடலை அப்புறப்படுத்திவிட்டு, தண்டவாளத்தை சரி செய்தனர். இதையடுத்து அங்கு ரெயில் போக்குவரத்து சீரானது. 
    ×